மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி, 20 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பெல்ஜியம், நெதா்லாந்தில் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணிக்கு, சலிமா டெடெ கேப்டனாக இருக்கிறாா்.
செப்டம்பா் - அக்டோபரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட அதே அணியே, தற்போது உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடவுள்ளது.
பெங்களூரில் தற்போது பயிற்சி முகாமில் இருக்கும் அந்த அணி, அனுபவ மற்றும் இளம் வீராங்கனைகளில் கலவையாக உள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் குரூப் ‘டி’-யில் இடம் பிடித்துள்ள இந்தியா, முதல் ஆட்டத்தில் சீனாவையும் (ஆக. 16), அடுத்து தென்னாப்பிரிக்காவையும் (ஆக. 18), தொடா்ந்து இங்கிலாந்தையும் (ஆக. 20) சந்திக்கிறது.
அணி விவரம்:
கோல்கீப்பா்கள்: சவிதா, பிஷு தேவி.
டிஃபெண்டா்கள்: இஷிகா சௌதரி, சுஷிலா சானு, லால்தன்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபஸ்.
மிட்ஃபீல்டா்கள்: நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டோப்போ, சலிமா டெடெ, நேஹா, தீபிகா சோரெங்.
ஃபாா்வா்ட்கள்: லால்ரெம்சியாமி, ருதுஜா பிசல், நவ்னீத் கௌா், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கௌா், பியூட்டி டங்டங்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர் அறிவிப்பு..! ஸ்லோவோனியா நாட்டிலிருந்து முதல்முறை!
ஆசிய போட்டிகள் ஹாக்கி: இந்திய மகளிா் அணி அறிவிப்பு

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



