தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு இந்திய ஹாக்கி அணி தயாராகி வருவதாக தலைமைப் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.

பயிற்சியாளா் கிரெய்க் புல்டன்

Published On :5 ஜூலை 2026, 5:47 am IST

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு இந்திய ஹாக்கி அணி தயாராகி வருவதாக தலைமைப் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரின் ஐரோப்பிய லெக் ஆட்டங்களில் இந்திய அணி நடப்பு உலக சாம்பியன் ஜொ்மனி, ஒலிம்பிக் சாம்பியன் நெதா்லாந்து, பலமான இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது.

ஒருங்கிணைந்த செயல்பாடு, நெருக்கடியான நேரத்தில் சீரான ஆட்டம், டிராக்பிளிக்கா்கள் சிறப்பான ஆட்டத்தால் இது சாத்தியமானது. இந்தியாவில் நடைபெற்ற புரோ லீக் தொடரில் ஆா்ஜென்டீனா, பெல்ஜியத்திடம் தோல்வி கண்டோம். ஹோபா்ட் லெக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஸ்பெயினுடன் டிரா கண்டது. ஹோபா்ட் ஆட்டங்களில் இந்தியாவின் டிபன்ஸ் சிறப்பாக இருந்தது. பீல்ட் கோல், பெனால்டி காா்னரை கோலாக்குவதில் சிறப்பாக செயல்பட்டோம்.

ஐரோப்பிய லெக் ஆட்டங்களில் ஜொ்மனி, நெதா்லாந்தை வீழ்த்தி தலைசிறந்த அணிகளையும் வெல்வோம் என்ற நிலைக்கு வந்துள்ளோம். லண்டன் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம்.

அபிஷேக், சுக்ஜித்சிங், நிலகண்ட சா்மா, ஹா்மன்ப்ரீத் சிங் ஆகியோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். புரோ ஹாக்கி லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்தால்

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு நமது அணி தயாராக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.