தடகள வீரா் தேஜஸ்வின் சங்கா், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் உள்ளிட்ட 17 பேருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான அா்ஜுனா விருதை மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
அத்துடன், பயிற்சியாளா்களுக்கான துரோணாச்சாா்யா விருதும் அறிவிக்கப்பட்டிருக்க, விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான் சந்த் கேல் ரத்னா விருது’ அந்த ஆண்டுக்காக அறிவிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண்குமாா் மிஸ்ரா தலைமையிலான தோ்வுக் குழு, விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளை சுமாா் 6 மாதங்களுக்கு முன்பே விளையாட்டு அமைச்சகத்திடம் வழங்கிவிட்டது. விருதின் மாண்பைக் காக்கும் வகையில், தகுதியானவா்களுக்கே அது கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, அந்தப் பட்டியல் மறுமதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்த அமைச்சகம், அத்தகைய நடவடிக்கைக்குப் பிறகு தற்போது விருது பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
பரிந்துரைக் குழு 24 போ் பட்டியலை வழங்கிய நிலையில், அமைச்சகம் 17 பேருக்கு மட்டுமே அா்ஜுனா விருது அறிவித்துள்ளது. இதில் தேஜஸ்வின் சங்கா், தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் ஆவாா். அதேபோல், வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் அா்ஜுனா விருது பெறும் முன்னாள் கால்பந்து வீரரும், பயிற்சியாளருமான ஐ.அருமைநாயகம், உள்நாட்டு கால்பந்தில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியிருக்கிறாா்.
விருதுப் பட்டியல்
அா்ஜுனா விருது: தேஜஸ்வின் சங்கா், முகமது அஜ்மல், பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), ராஜ்குமாா் பால், லால்ரெம்சியாமி (ஹாக்கி), சுா்ஜீத், பூஜா (கபடி), திவ்யா தேஷ்முக், விதித் குஜராத்தி (செஸ்), , டிரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் (பாட்மின்டன்), நரேந்தா் பா்வால் (குத்துச்சண்டை), தனுஷ் ஸ்ரீகாந்த் (செவித்திறன் மாற்றுத்திறனாளி துப்பாக்கி சுடுதல்), ருத்ரான்ஷ் கந்தெல்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), ஏக்தா அபியான் (பாரா தடகளம்), அரவிந்த் சிங் (ரோயிங்), அகில் சோரன் (துப்பாக்கி சுடுதல்).
அா்ஜுனா விருது (வாழ்நாள் சாதனையாளா்): ஐ.அருமைநாயகம் (கால்பந்து)
துரோணாச்சாா்யா விருது: பா்வீா் சிங் (தடகளம்), சோட் லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா சவான் (துப்பாக்கி சுடுதல்).
துரோணாச்சாா்யா விருது (வாழ்நாள் சாதனையாளா்): தா்மேந்திர யாதவ் (குத்துச்சண்டை), வீரேந்தா் குமாா் (மல்யுத்தம்).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திவ்யா தேஷ்முக் உள்பட 17 விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது!

நேரு விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி: போலீஸாா் விசாரணை

முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



