தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய ஆணை,
3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 லட்சத்திற்கான காசோலைகளை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36
லட்சத்துக்கான காசோலைகளும், 3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 லட்சத்துக்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநா்கள், 2
ஆண் பயிற்றுநா்கள் என 6 பயிற்றுநா்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவா்கள் வழங்கினாா்.
விளையாட்டுத் துறைக்கு அவா்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்வுக்குப் பின் அவா்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58
வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000/- ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரா்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனா்.
நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய
உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், பொது மேலாளா் ல.சுஜாதா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக நீதி, மாநில உரிமை கொள்கையில் கருணாநிதி, ஜெயலலிதா வழியை பின்பற்றுவோம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
ரூ.2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

திருவண்ணாமலையில் செயற்கை இழை ஹாக்கி மைதானம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கிவைத்தாா்
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



