பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்புநேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

களமிறங்கிய ரோட்ரி: ஸ்பைடர் மேன் கொண்டாட்டத்தில் ரபீனியா; பார்சிலோனா அபாரம்!

கேப்டன் ரபீனியாவின் அசத்தலால் வென்ற பார்சிலோனா அணி குறித்து...

Rodri and Raphinha celebrating in Spider-Man style.

ரோட்ரி, ஸ்பைடர் மேன் கொண்டாட்டத்தில் ரபீனியா. - படங்கள்: எக்ஸ் / எப்ஃசி பார்சிலோனா

Published On :

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் கேப்டன் ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா அணி 2-0 என அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் உலகக் கோப்பையில் தங்கப் பந்து விருது வென்ற ரோட்ரி பார்சிலோனா அணிக்காக 63ஆவது நிமிஷத்தில் களமிறங்கினார். அறிமுக போட்டியில் அவரும் சிறப்பாக விளையாடினார்.

அத்லெடிக் பில்போ அணியுடன் பார்சிலோனா அணி நள்ளிரவு மோதியது. இந்தப் போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் ரபீனியா 37ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். ஸ்பைடர்மேன் பாணியில் கொண்டாடினார். முந்தைய போட்டியிலும் அவர் கோல் அடித்திருந்தார்.

பின்னர், 63ஆவது நிமிஷத்தில் ரபீனியா வெளியேற, உலகக் கோப்பை நாயகன் ரோட்ரி களமிறங்கினார். பின்னர் 82ஆவது நிமிஷத்தில் ஃபெர்மின் லோபஸ் அசத்தலான கோல் அடித்து 2-0 என வெற்றிக்கு வித்திட்டார்.

இந்தப் போட்டியில் பார்சிலோனா அடித்த 20 ஷாட்டுகளில் 10 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. அத்லெடிக் அணியினால் ஒருமுறைக்கூட இலக்கை நோக்கி அடிக்க முடியாதபடி பார்சிலோனா தடுப்பாட்டத்தில் மிரட்டியது.

இந்த வெற்றியினால் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ரியல் மாட்ரிட் அணி இரண்டாமிடம் தள்ளப்பட்டுள்ளது.

Summary

Raphinha, Fermin Lopez Strike Again As Barcelona Beat Athletic Bilbao

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.