மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து பார்சிலோனா அணியில் இணைந்த ரோட்ரி, “பார்சிலோனா அணியில் விளையாடுவது என்பது எனது கனவு” என பேட்டி அளித்துள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பையில் தங்கப் பந்து விருதை வென்ற ரோட்ரி பார்சிலோனா அணியில் இணைந்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளார். கடந்த 2023-34 சீசனில் பேலந்தோர் விருது வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் ரோட்ரி (30 வயது) இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியில் 2019 முதல் விளையாடி வந்தார்.
இந்த நிலையில், பார்சிலோனா அணி அவரை 76.5 மில்லியன் யூரோஸ் (இந்திய மதிப்பில் ரூ. 847 கோடி) தொகைக்கு 2030 வரைக்கும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சிலோனா வந்தடைந்து ரோட்ரி மருத்துவ பரிசோதனைகள், அதனைத் தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்து பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரோட்ரி பேசியிருப்பதாவது:
பார்சிலோனாவுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. மிகவும் தீவிரமான நாள்கள் இருந்துள்ளன. ஆனால், எல்லாம் நல்லபடியாக முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னைப் பொறுத்தவரைக்கும் பார்சிலோனாவில் விளையாடுவது என்பது கனவு போன்றது. அணியில் இணைய மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இதில் பலரை எனக்கு முன்பு தெரியும். சாம்பியன்ஸ் லீக் உள்பட பல கோப்பைகளை வெல்ல நான் உதவுவேன் என்றார்.
Summary
Rodri says it's a dream to play for Barcelona as he arrives to seal transfer from Manchester City
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லோன் மூலமாக லிவர்பூல் அணியில் இணைந்த பார்சிலோனாவின் கேப்டன்!

தங்கப் பதக்கம் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல... அருந்ததி சௌதரி நெகிழ்ச்சி!

மெஸ்ஸி புறக்கணிப்பு? ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது நியாயமா?

தடுப்பாட்டம்: முதலிடத்தில் நீடிக்கும் பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!




