நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் புதிய சாதனைகள் படைத்த லமின் யமால்!

பார்சிலோனாவின் இளம் வீரர் லமின் யமால் நிகழ்த்திய சாதனைகள் குறித்து...

Lamine Yamal with the Barcelona captain's armband.

பார்சிலோனா கேப்டனுக்கான பட்டையுடன் லமின் யமால். - படங்கள்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா

Published On :

ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து வரலாறு மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் 19 வயதான இளம் வயது வீரர் லமின் யமால் புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

பார்சிலோனா கால்பந்து வரலாற்றில் மிகவும் இள வயதில் (19 ஆண்டுகள் 58 நாள்கள்) கேப்டனாக பொறுப்பேற்றவராக லமின் யமால் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, 20 ஆண்டுகள் 59 நாள்களில் போஜன் க்ரிக் கேப்டனாக இருந்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் பார்சிலோனா 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் லமின் யமால் 1 கோல், 2 அசிஸ்ட் செய்து அசத்தினார்.

சாம்பியன்ஸ் லீக்கில் இளம் வயதில் அதிக கோல் பங்களிப்பு செய்தவராகவும் சாதனை படைத்துள்ளார். 20 வயதுக்கு முன்னதாகவே லமின் யமால் 12 கோல்கள், 12 அசிஸ்டுகளைச் செய்து முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக கிலியன் எம்பாபே 20 வயதில் 13 கோல்கள், 7 அசிஸ்ட்டுடன் 20 கோல் பங்களிப்பு செய்து வந்தார். இதனை 20 வயதுக்கு முன்பாகவே லமின் யமால் முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் லமின் யமால் கேப்டனுக்கான பட்டையையும் அணிந்து விளையாடினார். முதல்நிலை கேப்டனாக ரபீனியாவும் அடுத்தடுத்த நிலைகளில் பெட்ரி, டிஜோங் என இருக்கிறார்கள்.

Summary

Lamine Yamal sets new records in Barcelona's and Champions League football history!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.