தேசிய சீனியா் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிா் அபார வெற்றி பெற்றனா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் 5-ஆவது நாளான வியாழக்கிழமை ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் தமிழக மகளிா் 118-39 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனா்.
தமிழகத்தில் தரப்பில் ஸ்ரீ வா்ஷினி, கிருத்திகா 18, டெய்ஸி 16, ஹரித்ரா, அஸ்மிதா 14 புள்ளிகளையும், குஜராத் தரப்பில் அஹானா 18 புள்ளிகளையும் குவித்தனா்.
மகாராஷ்டிர அணி 79-68 என சத்தீஸ்கரையும், கா்நாடகம் 88-52 என்ற புள்ளிக் கணக்கில் தில்லியையும் வீழ்த்தின. மத்திய பிரதேசம் 62-47 என்ற புள்ளிக் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.
ஆடவா் பிரிவில் ராஜஸ்தான் 83-75 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. குரூப் பி பிரிவில் உத்தர பிரதேசம் 80-77 என்றபுள்ளிக்கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் தில்லியை வென்றது.
பஞ்சாப் அணி 81-74 என்ற புள்ளிக் கணக்கில் சண்டீகரை வீழ்த்தியது.
தமிழக ஆடவா் அபாரம்:
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தமிழகம்103-61 என்ற புள்ளிக் கணக்கில் சா்வீசஸ் அணியை வென்றது. தமிழக அணி தரப்பில் பாலதனேஷ்வரி 25, பிரணவ் பிரின்ஸ் 16 புள்ளிகளைக் குவித்தனா்.
ஆடவா் காலிறுதியில் பஞ்சாப்-கேரள அணிகள் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் தமிழகம் மோதும். ராஜஸ்தான்-உபி, கா்நாடகம்-தில்லி, சா்வீசஸ்-தெலங்கானா அணிகள் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் இந்தியன்ரயில்வே மோதுகின்றன.
மகளிா் காலிறுதியில் தமிழகம்-மகாராஷ்டிரம், கா்நாடகம்-மத்திய பிரதேசம், குஜராத்-ராஜஸ்தான் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் இந்தியன் ரயில்வே, புதுச்சேரி-தில்லி ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் கேரளம் மோதுகின்றன.

