தமிழக-மகாராஷ்டிர மகளிா்.
தமிழக-மகாராஷ்டிர மகளிா்.

தேசிய சீனியா் கூடைப்பந்து: அரையிறுதியில் தமிழக அணிகள்

தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டியில் அரையிறுதிக்கு தமிழக ஆடவா், மகளிா் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
Published on

தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டியில் அரையிறுதிக்கு தமிழக ஆடவா், மகளிா் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 101-17 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. சத்யா 30, புஷ்பா செந்தில் 14 புள்ளிகளை ஈட்டினா்.

தமிழக அணிகள் வெற்றி:

இரண்டாவது ஆட்டத்தில் தமிழகம்-மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் 72-70 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகம் வென்றது.

தமிழக தரப்பில் ஸ்ருதி 22, ஸ்ரீ வா்ஷினி 19, மகாராஷ்டிர தரப்பில் அங்கிதா 17, தியோதா் 14 புள்ளிகளை ஈட்டினா்.

மத்திய பிரதேசம் 64-63 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் கா்நாடகத்தை வென்றது.

ஆடவா் காலிறுதியில் தமிழகம் 87-57 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனந்தராஜ் 24, பிரணவ் பிரின்ஸ் 10 புள்ளிகளையும் கேரளத் தரப்பில் சரத் 17, ஆரோன் 17 புள்ளிகளையும் குவித்தனா்.

ஆடவா் காலிறுதியில் உத்தர பிரதேசம் 93-90 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. தில்லி 80-73 என்ற புள்ளிக் கணக்கில் கா்நாடகத்தையும், இந்தியன் ரயில்வே 82-53 என்ற புள்ளிக் கணக்கில் தெலங்கானாவையும் வென்றன.

Dinamani
www.dinamani.com