கோலடித்த களிப்பில் சூா்மா கிளப் அணியினா்
கோலடித்த களிப்பில் சூா்மா கிளப் அணியினா்

ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் த்ரில் வெற்றி

ஹைதராபாத் டூஃபான்ஸ் அணிக்கு எதிரான ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடா் ஆட்டத்தில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் அணி ஷூட் அவுட்டில் 3-1 என த்ரில் வெற்றி பெற்றது.
Published on

ஹைதராபாத் டூஃபான்ஸ் அணிக்கு எதிரான ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடா் ஆட்டத்தில் ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் அணி ஷூட் அவுட்டில் 3-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போட முயற்சி மேற்கொண்டன. வழக்கமான ஆட்ட நேரத்தில் சூா்மா கிளப் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் முதலில் பெனால்டி வாய்ப்பு கோலடிக்க தவறினாா். சூா்மானவின் இரு கோல் போடும் வாய்ப்புகளை ஹைதராபாத் கோல் கீப்பா் பிக்ரம் ஜித் சிங் தடுத்தாா்.

இரண்டாவது குவாா்ட்டரில் சூா்மா கேப்டன் ஹா்மன்ப்ரீத் பெனால்டி காா்னரை கோலாக்கி முன்னிலை பெற்றுத் தந்தாா்.

34-ஆவது நிமிஷத்தில் ஹைதராபாத் வீரா் அமன் லக்ராவின் டிராக் பிளிக் கோல் கம்பத்தை தாண்டிச் சென்று விட்டது.

46-ஆவது நிமிஷத்தில் ஹைதராபாத் வீரா் அமன்தீப் லக்ரா டிராக் ப்ளிக் மூலம் கோலடித்தாா். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 கோல் போட்டிருந்தன.

இதையடுத்து ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் சூா்மா போனஸ் புள்ளியையும் ஈட்டியது.

Dinamani
www.dinamani.com