

பார்சிலோனா கால்பந்து அணியின் புதிய கோல்கீப்பர் ஜோன் கார்சியா (24 வயது) மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஜோன் கார்சியா தனது கடைசி 7 போட்டிகளில் 6-ல் க்ளீன்ஷீட் (எதிரணிக்கு கோல்களை விடாமல் ஆட்டத்தை முடிப்பது) பெற்று அசத்தியுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த ஜோன் கார்சியா எஸ்பான்யோல் அணியில் விளையாடி வந்தார். கடந்த ஜூனில் 25 மில்லியன் யூரோவிற்கு பார்சிலோனா அணியில் வாங்கப்பட்டார்.
ஜோன் கார்சியா 1.93 மீட்டர் (6 அடி 4 அங்குலம்) உயரம் கொண்டவர். கோல் கீப்பிங்கில் அசத்தி வருகிறார்.
ரியல் மாட்ரிட் உடனான ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் முக்கியமான கடைசி நேரத்தில் 2 கோல்களை தடுத்தி நிறுத்தி ஆட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார்.
தனது முன்னாள் அணிக்கு எதிரான போட்டியில் ”எலி, யூதாஸ்” எனக் கேலி செய்யப்பட்டார்.
அந்தப் போட்டியிலும் மிகச் சிறப்பாக கோல் கீப்பிங் செய்து பார்சிலோனா வெற்றிக்கு வித்திட்டார்.
கடைசி 7 போட்டிகளில் 6 -ல் க்ளீன்ஷீட் பெற்று அசத்தியுள்ளார். பார்சிலோனா ரசிகர்கள் இவரை சேவியர் - பாதுகாவலன் என அழைக்கிறார்கள்.
பார்சிலோனா தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது, “காலிங் செக்யூரிட்டி” எனப் பதிவிட்டு அவரது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.