

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முதல் சுற்றில், மகளிர் இரட்டையரில் அஷ்வினி பாட்/ஷிகா கெüதம் ஜோடி 14-21, 12-21 என்ற நேர் கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா குசுமா/மெலிசா புஸ்பிதசாரி இணையிடம் தோல்வி கண்டது.
அதேபோல், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா இணை 12-21, 5-21 என, 7-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் லி ஜிங் பாவ்/லி யி ஜிங் கூட்டணியிடம் தோல்வியுற்றது.
ஆடவர் இரட்டையரில், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி/சாய் பிரதீக் கூட்டணி 20-22, 20-22 என்ற கேம்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் நூர் முகமது அயுப்/டான் வீ கியோங் ஜோடியிடம் போராடித் தோற்றது.
இதனிடையே தகுதிச்சுற்றில் வென்று, அஷ்மிதா சாலிஹா பிரதான சுற்றுக்குத் தகுதிபெற்றார். எனினும், ஆடவர் ஒற்றையரில் ரித்விக் சஞ்சீவி, சனீத் தயானந்த், மகளிர் ஒற்றையரில் ஷ்ரேயா லிலி, கலப்பு இரட்டையரில் மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன், மகளிர் இரட்டையரில் ராஷ்மி கணேஷ்/சானியா சிக்கந்தர் ஆகியோர் தகுதிச்சுற்றிலேயே தோற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.