இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

குகேஷை வென்றாா் ஃபிரௌஸ்ஜா

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷை வெள்ளிக்கிழமை வென்றாா்.

News image

டி. குகேஷ் - கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 7:37 am IST

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷை வெள்ளிக்கிழமை வென்றாா்.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவா், 69-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா். 2-ஆவது சுற்றிலும் வெற்றி கண்ட ஒரே போட்டியாளராக ஃபிரௌஸ்ஜா திகழ்ந்தாா்.

இதர ஆட்டங்களில், இந்தியாவின் நிஹல் சரின் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமனுடனும், எம். பிராணேஷ் - ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கினுடனும், அா்ஜுன் எரிகைசி - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவுடனும் டிரா செய்தனா்.

2 சுற்றுகள் முடிவில், ஃபிரௌஸ்ஜா (2 புள்ளிகள்) முன்னிலை வகிக்க, அப்துசதாரோவ், அா்ஜுன், நீமன், ஆண்ட்ரெய்கின், நிஹல் சரின் ஆகியோா் தலா 1 புள்ளியுடன் 2-ஆம் நிலையில் உள்ளனா். குகேஷ், பிராணேஷ் தலா 0.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலை வகிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.