சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளது குறித்து...

News image

சாம்பியனாக அனாஹத் சிங். - படம்: எக்ஸ் / வேர்ல்டு ஸ்குவாஷ்

Updated On :26 ஜூலை 2026, 11:56 am IST

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங்கும்- எகிப்தின் ருக்கையா சலீமும் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் 11-3, 11-7, 11-9 என 3-0 கேம்களில் அனாஹத் சிங் வென்று மகளிரில் சாம்பியனாக வெற்றி பெற்றார்.

கடந்தாண்டு அனாஹத் சிங் வெண்கலம் வென்றிருந்தார். கடந்த 2005-இல் ஜாம்பவான் ஜோஷ்னா சின்னப்பா அப்போது உலக ஜூனியா் ஸ்குவாஷ் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன்பின் தற்பது 21 ஆண்டுகள் கழித்து அனாஹத் இச்சிறப்பை பெற்றுள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பாவும் நிகழ்தாத சாதனையை அனாஹத் சிங் நிகழ்த்தியுள்ளார். முதல் இந்தியராக உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் சாம்பியனாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆடவர் பிரிவில் 16 முறையும் மகளிர் பிரிவில் 17 முறையும் சாம்பியனான எகிப்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 16 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து அல்லாத ஒருவர் இதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Anahat Singh becomes India's first champion at the World Junior Squash Championships!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.