தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கால்பந்து உலகக் கோப்பை: சமனில் முடிந்த பிரேசில் - மொராக்கோ ஆட்டம்!

கால்பந்து உலகக் கோப்பையின் பிரேசில் - மொராக்கோ அணிகளின் போட்டி குறித்து...

Brazil's Vinicius Junior (7) celebrates with teammate Bruno Guimaraes (8) after scoring during the World Cup Group C soccer match against Morocco in East Rutherford, N.J., near New York, Saturday, June 13, 2026. (AP Photo/Matt Slocum)

கோல் அடித்த மகிழ்ச்சியில் வினிசியஸ் ஜூனியர். - படம்: ஏபி

Published On :

நியூ ஜெர்ஸி மெட்லைஃப் திடலில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் - மொராக்கோ அணிகளின் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் சுவார்சியமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியின் 21ஆவது நிமிஷத்தில் மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கோல் அடித்தார். அடுத்ததாக, 32ஆவது நிமிஷத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் வினிசியஸ் அற்புதமான கோல் அடித்தார்.

இந்தப் போட்டியைப் பார்க்க 80,663 பேர் கூடியிருந்தார்கள். பெரும்பாலும் பிரேசில் ரசிகர்களே அதிகமாக இருந்தார்கள்.

பிரேசில் அணியில் 37ஆவது நிமிஷத்தில் காசிமிரோ, 43ஆவது நிமிஷத்தில் ரோஜர் இபானீஸுக்கு ’யெல்லோ கார்டு’ கொடுக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் நெய்மர் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. இருந்தும் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த நெய்மர் ஆர்வத்துடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.

முதல்முறையாக டாப் 10 அணிகளில் இருக்கும் அணிகள் இந்த உலகக் கோப்பையில் மோதின. பிரேசில் 6ஆவது இடத்திலும் மொராக்கோ 7ஆவது இடத்திலும் இருக்கின்றன.

Summary

Brazil rallies for 1-1 draw against Morocco in its World Cup opener behind Vinicius Junior goal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.