ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா.
ஆஸ்திரேலியாவில் ஏஎஃப்சி மகளிா் ஆசியக் கோப்பை 2026 போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2022 போட்டியில் இந்திய அணி வெளியேறிய நிலையில், நான்காண்டுகள் கழித்து கனவு நிறைவேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குவாலிஃபயா் ஆட்டங்களில் இந்திய மகளிா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
தலைமை பயிற்சியாளராக அமெலியா வல்வோ்ட் நியமிக்கப்பட்ட நிலையில் அணியின் செயல்பாடு ஏற்றம் கண்டுள்ளது.
பயிற்சியாளா் அமெலியா, கேப்டன் ஸ்வீட்டி தேவி கூறியது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்வுகளை கருத்தில் கொள்ளக் கூடாது. மீண்டும் தகுதி பெற்றுள்ளோம். நமது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டம் இதுவாகும். நன்றாக தயாராகி உள்ளோம். எந்த ஆட்டத்தையும் எளிதாக கருத மாட்டோம் என்றனா்.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2027-இல் பங்கேற்க தகுதி பெறுவா்.
காலிறுதியில் தோற்கும் 4 அணிகள், குவாலிஃபயா் மூலம் நேரடி தகுதி பெறுவதற்கான ஆட்டத்திலும், பிளே ஆஃப் சுற்றிலும் ஆடுவா்.
தரவரிசையில் 67ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி பல்வேறு நாடுகளில் 52 நாள்கள் பயிற்சி மேற்கொண்டது.
தொடர்புடையது

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுமா இந்தியா? தகுதிச் சுற்று தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


