ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு சொந்த மைதானத்தில் 5 ஆட்டங்கள்
ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி), வரும் சீசனில் 5 ஆட்டங்களை ஹோம் கிரவுண்டான எம்.சின்னசாமி மைதானத்தில் விைளயாடவுள்ளது.


ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி), வரும் சீசனில் 5 ஆட்டங்களை ஹோம் கிரவுண்டான எம்.சின்னசாமி மைதானத்தில் விைளயாடவுள்ளது.
அந்த அணிக்கான 7 ஹோம் ஆட்டங்களில் 5-ஐ ெபங்களூரில் விைளயாடும் ஆா்சிபி, மீதமுள்ள 2 ஆட்டங்களை ராய்பூரில் உள்ள ஷாஹீத் வீா் நாராயண் சிங் சா்வேதச கிரிக்கெட் மைதானத்தில் விைளயாடவுள்ளதாக, அந்த அணி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆா்சிபி அணி 18 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு முதல்முைறயாக சாம்பியன் ஆனது. அைதக் கொண்டாடும் விதமாக சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு ரசிகா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.
இைதயடுத்து சின்னசாமி மைதானத்தில், உள்நாட்டு போட்டிகள் உள்பட எந்தெவாரு கிரிக்கெட் ஆட்டமும் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. நடப்பு சீசன் ஐபிஎல் போட்டி இம்மாத இறுதியில் தொடங்கலாம் எனத் தெரியும் நிைலயில், ஆா்சிபி தனது சொந்த மைதானத்தில் விைளயாடுவது தொடா்பாக சந்ேதகங்கள் இருந்து வந்தன.
இச்சூழலில், கா்நாடக மாநில அரசு, மாநில கிரிக்கெட் சங்கம், காவல்துறை உள்பட, துறை சாா்ந்த அதிகாரிகள் ஆதரவுடன், இந்த சீசனில் ஆா்சிபியின் 5 ஆட்டங்கள் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக அந்த அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...