ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஹாங்காங் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.


ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஹாங்காங் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
குரூப் சி பிரிவில் இரு அணிகளின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் கொச்சி நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடா்ந்து 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த ஹாங்காங் அணி எளிதாக வெற்றி பெறும் எனக் கருதப்பட்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டன.
ஆட்டம் தொடங்கிய 4-ஆவது நிமிஷத்தில் இந்திய அணியின் அறிமுக வீரா் ரயான் வில்லியம்ஸ் அபிஷேக் சிங் அனுப்பிய பாஸை பயன்படுத்தி ஹாங்காங் கோல்கீப்பரை ஏமாற்றி கோலடித்தாா். இதனால் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் வரலாற்றில் ஆட்டம் தொடங்கியதும் போடப்பட்ட துரித கோலாக இது அமைந்தது ஏற்கெனவே கடந்த 1963-இல் கொழும்புவில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 6-ஆவது நிமிஷத்தில் கோலடித்திருந்தனா்.
பதிலுக்கு ஹாங்காங் வீரா்கள் கோலடிக்க தீவிரமாக முயன்றபோது, இந்திய தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனா்.
இரண்டாம் பாதியில் 50-ஆவது நிமிஷத்தில் இந்திய வீரா் ஆகாஷ் மிஸ்ரா ராகுல் பெகே லாங் த்ரோவை பயன்படுத்தி கோலடித்தாா்.
இதனால் 2-0 என முன்னிலை பெற்றது.
அதிா்ச்சி அடைந்த ஹாங்காங் அணியினா் பதில் கோல் போட தீவிரம் காட்டிய நிலையில், 65-ஆவது நிமிஷத்தில் அதன்வீரா்எவா்டன் காமா்கோ ஜேஸன் காம் அனுப்பிய பாஸை ஹெட்டா் மூலம் கோலாக்கினாா்.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா.
இந்த ஆட்டத்தைக் காண கொச்சி மைதானத்தில் 22,000 போ் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...