15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஒடிஸாவுடன் டிரா செய்த பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

News image
Updated On :5 மே 2026, 4:13 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஒடிஸா தரப்பில் ரஹிம் அலி 34-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதனால் முதல் பாதி ஆட்டத்தை ஒடிஸா முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், தொடக்கத்திலேயே பெங்களூரு பதிலடி கொடுத்தது. 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் பிரயன் சான்ஷெஸ் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாகப் போராட, பலம் வாய்ந்த பரஸ்பர சவால் காரணமாக எந்த அணிக்கும் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

புள்ளிகள் பட்டியலில், பெங்களூரு 11-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது டிராவுடன் 17 புள்ளிகளோடு 6-ஆம் இடத்தில் இருக்கிறது. ஒடிஸா 10 ஆட்டங்களில் 4-ஆவது டிராவுடன் 7 புள்ளிகளோடு 13-ஆம் இடத்தில் உள்ளது.

அடுத்த ஆட்டத்தில், மும்பை சிட்டி எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.