ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 4-ஆவது ரேஸôன மியாமி கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றார்.
ஏற்கெனவே, சீன கிராண்ட் ப்ரீ, ஜப்பான் கிராண்ட் ப்ரீ ஆகியவற்றிலும் வென்ற ஆன்டனெலிக்கு இது தொடர்ந்து 3}ஆவது வெற்றியாகும் (ஹாட்ரிக்).
மியாமி கிராண்ட் ப்ரீயில் அவர் முதல் வீரராக வர, நடப்பு சாம்பியாக இருக்கும் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 2}ஆம் இடம் பெற்றார். அவரின் சக மெக்லாரென் டிரைவரும், ஆஸ்திரேலியருமான ஆஸ்கர் பியஸ்ட்ரி 3}ஆம் இடம் பிடித்தார்.
மழையால் பாதிக்கப்படும் அச்சம் இருந்ததால், பந்தயம் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. பந்தயம் தொடங்கும் முன்பாகவும் கன மழை பெய்திருந்தது. மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி இருந்ததால், முதல் 25 லாப்களில் வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர்.
முன்னிலையுடன் (போல் பொசிஷன்) பந்தயத்தை தொடங்கிய ஆன்டனெலி, 3}ஆவது லாப்பில் பின்னடைவை சந்தித்தார். எனினும் 5}ஆவது லாப்பில் மீண்டும் முன்னிலை பெற்றார். பின்னர் லாண்டோ நோரிஸ், சார்லஸ் லெக்லெர்க், ஆன்டனெலி ஆகியோர் முன்னிலையும், பின்னிலையுமாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்தனர்.
பிறகு ஒரு கட்டத்தில் முன்னிலை பெற்ற ஆன்டனெலி, இறுதிவரை அதைத் தக்கவைத்து வெற்றி பெற்றார்.
போட்டியின் அடுத்த பந்தயமான கனடியன் கிராண்ட் ப்ரீ, வரும் 24}ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்

ஐபிஎல் 2026ன் 49ஆவது போட்டி: பஞ்சாப் பந்துவீச்சு; சன்ரைசர்ஸ் பேட்டிங்!
ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: கிமி ஆன்டனெலிக்கு தொடா்ந்து 2-ஆவது வெற்றி!
சீன கிராண்ட் ப்ரீ: ஆன்டனெலி முதலிடம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

