ஐபிஎல் 2026 சீசனின் ஐந்தாவது போட்டியில் லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் டாஸ் வென்று, “சிவப்பு நிறத்தாலான பிட்ச் என்பதால் முதல் 6 ஓவர்கள் நன்றாக உபயோகமாகும்” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் ஆர்சிபி வென்றது. அதற்கடுத்த மூன்று போட்டிகளில் மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் வென்றுள்ளன.
எட்டு அணிகள் தங்களது முதல் போட்டியில் விளையாடியுள்ளன. மீதமுள்ள இரு அணிகள் தில்லி, லக்னௌவும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் யார் தங்களது முதல் வெற்றியைப் பெறப்போகிறார்கள் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
லக்னௌ அணி (பிளேயிங் லெவன்): எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், முகுல் சவுத்ரி, மோஷின் கான், முகமது ஷமி, அன்ரிச் நோர்க்யா, பிரின்ஸ் யாதவ்.
தில்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): கே.எல். ராகுல், பதும் நிசாங்கா, நிதிஷ் ராணா, அக்ஷர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், விப்ராஜ் நிகாம், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்.
Summary
Indian Premier League 2026, 5th Match, Delhi Capitals opt to bowl.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் 2026ன் 49ஆவது போட்டி: பஞ்சாப் பந்துவீச்சு; சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



