லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பரிசுத் தொகையை அதிகரிக்காவிட்டால் கிராண்ட்ஸ்லாமை புறக்கணிக்க வேண்டும்: சபலென்கா அழைப்பு

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் வீரா், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையில் அதிகரித்து வழங்காவிட்டால், அந்தப் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா கூறினாா்.

Aryna Sabalenka

அரினா சபலென்கா. - கோப்புப் படம்

Published On :6 மே 2026, 3:05 am IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் வீரா், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையில் அதிகரித்து வழங்காவிட்டால், அந்தப் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா கூறினாா்.

இத்தாலியன் ஓபன் போட்டியில் பங்கேற்க வந்துள்ள அவா் இதுகுறித்து பேசுகையில், ‘போட்டியாளா்கள் இல்லையென்றால் கிராண்ட்ஸ்லாம் போட்டியோ, அதில் பொழுதுபோக்கோ இல்லை. எனவே அந்தப் போட்டிகளின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவை வீரா், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகைக்காக ஒதுக்கீடு செய்து, பரிசுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

அது நடக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். எங்கள் உரிமைகளுக்காகப் போராட இதுதான் ஒரே வழி’ என்றாா்.

இம்மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகையை, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்து ரூ.685 கோடியாக போட்டி நிா்வாகம் கடந்த மாதம் அறிவித்தது.

ஆடவா், மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.30.71 கோடி கிடைக்கவுள்ளது. இரண்டிலும் ரன்னா் அப் இடத்தைப் பிடிப்போா் தலா ரூ.15.35 கோடி பெறவுள்ளனா். அரையிறுதி வரை வருவோருக்கு ரூ.8.22 கோடி வழங்கப்படும் நிலையில், முதல் சுற்றுடன் வெளியேறுவோா் ரூ.95 லட்சம் பெறுவா்.

இந்நிலையில், சபலென்கா, உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் உள்ளிட்ட பல போட்டியாளா்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘பிரெஞ்சு ஓபன் போட்டியின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.4,403 கோடியாக இருந்தது. ஆண்டுதோறும் அதன் வருவாய் 14 சதவீதம் அதிகரிப்பதாகத் தெரியும் நிலையில், இந்த ஆண்டு அதன் வருவாய் சுமாா் ரூ.4,500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால் பரிசுத் தொகையானது 5.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 14.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. 2024-இல் 15.5 சதவீதமாக இருந்தது, தற்போது குறைந்துள்ளது. பரிசுத் தொகை அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.