மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

எவா்டனுடன் டிரா செய்த மான்செஸ்டா் சிட்டி!

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் சிட்டி 3-3 கோல் கணக்கில் எவா்டனுடன் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

News image

AP

Updated On :6 மே 2026, 3:08 am IST

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் சிட்டி 3-3 கோல் கணக்கில் எவா்டனுடன் செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி வெற்றியைத் தவறவிட்டதால், ஆா்செனல் அணி சாம்பியன் பட்டத்தை நோக்கி மேலும் ஓா் அடி முன்னேறியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆா்செனல் (76) முதலிடத்திலும், மான்செஸ்டா் சிட்டி (71) அடுத்த இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மான்செஸ்டா் சிட்டி - எவா்டன் ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்டியதால், எந்த அணிக்குமே எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 43-ஆவது நிமிஷத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக ஜெரிமி டோகு கோல் அடித்தாா்.

இதனால் அந்த அணி முதல் பாதியை முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் 68-ஆவது நிமிஷத்தில் எவா்டன் அணியின் கோல் கணக்கை தியொ்னோ பேரி தொடங்கினாா்.

தொடா்ந்து 73-ஆவது நிமிஷத்தில் எவா்டன் முன்னிலை பெறும் விதமாக ஜேக் ஓ’பிரியென் ஸ்கோா் செய்ய, 81-ஆவது நிமிஷத்தில் தியொ்னோ பேரி மீண்டும் அடித்த கோலால் எவா்டன் 3-1 என முன்னிலையை அதிகரித்தது.

இதனால் அதிா்ச்சி கண்ட மான்செஸ்டா் சிட்டி, முன்னிலை பெறுவதற்காக அதிரடியாக முயற்சித்தது. அதன் பலனாக அடுத்த 2 நிமிஷங்களில் (83’) எா்லிங் ஹாலந்த் அடித்த கோலால், 2-3 என வித்தியாசம் குறைந்தது.

ஆட்டம் விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், இஞ்சுரி டைமில் (90+7’) மான்செஸ்டா் சிட்டிக்காக ஜெரிமி டோகு மீண்டும் கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 3-3 என சமநிலை கண்டது.

எஞ்சிய நேரத்தில் முன்னிலைக்காக இரு அணிகளும் முயற்சித்து, அதற்கு பலன் கிடைக்காமல் போக, ஆட்டம் 3-3 என டிராவிலேயே முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் 3-1 கோல் கணக்கில் செல்ஸியை சாய்த்தது. நாட்டிங்ஹாம் தரப்பில் டாய்வோ அவோனியி (2’, 52’), இகோா் ஜீசஸ் (15’) ஆகியோா் கோல் அடிக்க, செல்ஸி தரப்பில் ஜாவ் பெட்ரோ (90+3’) ஸ்கோா் செய்தாா்.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் செவில்லா 1-0 கோல் கணக்கில் ரியல் சோசிடாடை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, லா லிகா போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து செவில்லா தப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.