இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கேத்தரினா சினியகோவா, ஜெலினா ஆஸ்டபென்கோ, அலெக்ஸாண்ட்ரா எலா உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா 6-2, 6-3 என பிரான்ஸின் லாய்ஸ் பாய்சனை வெளியேற்ற, ஜொ்மனியின் டாட்ஜனா மரியா 6-0, 6-3 என, போலந்தின் மெக்தா லினெட்டை தோற்கடித்தாா்.
லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-0, 6-1 என, இத்தாலியின் லுக்ரெஸியா ஸ்டெஃபானினியை சாய்க்க, பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா 6-0, 3-6, 6-4 என்ற செட்களில் போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சை வீழ்த்தினாா்.
கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 3-6, 2-6 என செக் குடியரசின் தெரெஸா வாலென்டோவாவிடம் தோல்வியுற்றாா். கிரீஸின் மரியா சக்காரி 5-7, 6-3, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் லில்லி டேகரை வென்றாா்.
அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் 6-3, 6-2 என, இத்தாலியின் நுரியா பிரான்காசியோவை வீழ்த்த, மற்றொரு அமெரிக்கரான பெய்டன் ஸ்டொ்ன்ஸ் 6-4, 6-4 என்ற வகையில் இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னை சாய்த்தாா்.
ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் 6-4, 6-4 என செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை வெல்ல, பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 6-7 (6/8), 4-6 என்ற செட்களில், பிரான்ஸின் லவ்லியா ஜீன்ஜீனிடம் தோல்வியுற்றாா்.
போா்ஜஸ், பேஸ் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-3, 6-0 என நெதா்லாந்தின் ஜெஸ்பா் டி ஜோங்கை வெல்ல, ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃப் 6-2, 6-4 என்ற கணக்கில் ஆா்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ கொமிசனாவை வெளியேற்றினாா்.
நெதா்லாந்தின் போடிக் வான் டெ 7-5, 6-3 என பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்த, ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மேன் 6-7 (3/7), 7-6 (7/2), 6-2 என்ற கணக்கில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை தோற்கடித்தாா்.
ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸ் 6-3, 7-6 (10/8) என அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை வீழ்த்த, போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுா் 6-4, 6-0 என்ற வகையில் பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை வெளியேற்றினாா்.
தொடர்புடையது

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்
3-ஆவது சுற்றில் அல்கராஸ், சின்னா்!
மியாமி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸாண்ட்ரா எலா அசத்தல் வெற்றி!
மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசாரியோ, பிளிங்கோவா வெற்றி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


