நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

News image
Updated On :8 மே 2026, 7:04 am IST

மியுனிக்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), பயர்ன் மியுனிக்கை வியாழக்கிழமை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 6}5 என வெற்றி பெற்ற பிஎஸ்ஜி, வரும் 30}ஆம் தேதி புடாபெஸ்டில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

நடத்துகிறது.

முன்னதாக பிஎஸ்ஜி } பயர்ன் மியுனிக் அணிகள் கடந்த மாதம் 29}ஆம் தேதி பாரீஸ் நகரில் மோதிய முதல் லெக் ஆட்டத்தில் பிஎஸ்ஜி 5}4 கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த அணிகள் ஜெர்மனியின் மியுனிக் நகரில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை மோதிய ஆட்டம் 1}1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் பிஎஸ்ஜிக்காக ஆஸ்மென் டெம்பெலெ 3}ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தார்.

இதனால் பயர்ன் மியுனிக்கிற்கான நெருக்கடி அதிகரித்தது.

முதல் பாதியில் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, 2}ஆவது பாதியிலும் அதே நிலை நீடித்தது. ஒருவழியாக ஸ்டாப்பேஜ் டைமில் (90+4') பயர்ன் மியுனிக் தரப்பில் ஹேரி கேன் ஸ்கோர் செய்தார்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் 1}1 என டிராவில் முடிந்தது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் பிஎஸ்ஜி 6}5 கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டத்துக்கு பிஎஸ்ஜி 3}ஆவது முறையாக வந்துள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான பிஎஸ்ஜி, அதற்கு முன் 2020}இல் இறுதி வரை வந்து, இதே பயர்ன் மியுனிக்கிடம் தோல்வி கண்டது.

ஜெர்மனியில் நடைபெறும் பந்தெஸ்லிகா, ஜெர்மன் கோப்பை போட்டிகளில் சாம்பியனாகியிருக்கும் பயர்ன் மியுனிக், சாம்பியன்ஸ் லீக்கிலும் வாகை சூடி "டிரெபிள்' எனப்படும் ஒரே ஆண்டில் 3 பட்டம் வெல்லும் கனவுடன் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.