நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘லவ் பைட்’ - (Love Bite) எனும் படத்திலிருந்து புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் பைட் என இந்தப் புரோமைவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை கான்ஜூரிங் கண்ணப்பா படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்.
நகைச்சுவை நடிகராக இருந்து முதன்மை நாயகனாக சந்தானம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் மாறினார். தில்லுக்கு துட்டு, ஏ1, டிடி ரிட்டென்ஸ் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் டெவிஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்ற படம் வெளியானது. சர்வர் சுந்தரம் படம் வெளியாகமலேயே இருக்கிறது.
இந்த நிலையில், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிப்பின் 29ஆவது படமாக லவ் பைட் உருவாகியுள்ளது. ”சிட்னி ஸ்வீனி பயலுக எல்லாம் ஒன்றுகூடுங்கள்...” எனப் படக்குழுவினர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புரோமோவில், ”கடியூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது ”எனக் குறிப்பிட்டுள்ளது. ஜோம்பி சம்பந்தப்பட்ட படமாக இருக்குமென கணிக்கப்படுகிறது.
Summary
Sydney Sweeney Payaluga.. Assemble "Love Bite" The First Song!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏஜிஎஸ் உடன் இணைந்த சந்தானம்..! புதிய படம் அறிவிப்பு!

ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!

பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நம்ம பாட்டனோட பாட்டு... வெளியானது கருப்பு படத்தின் பாடல்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

