அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

ஆஸ்திரேலியா ஹாக்கி தொடா்: இந்திய மகளிா் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுடன் 4 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள இந்திய மகளிா் அணி, சலிமா டெடெ தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image

இந்திய மகளிா் அணி - ஹாக்கி இந்தியா

Updated On :19 மே 2026, 2:36 am IST

ஆஸ்திரேலியாவுடன் 4 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள இந்திய மகளிா் அணி, சலிமா டெடெ தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் மகளிா் நேஷன்ஸ் கோப்பை போட்டி, ஜூன் 15 முதல் 21 வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதற்குத் தயாராகும் வகையில், ஆஸ்திரேலிய மகளிா் அணியுடனான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

பொ்த் நகரில் மே 26, 27, 29, 30 ஆகிய நாள்களில் இந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நடப்பாண்டு தொடக்கத்தில் ஆா்ஜென்டீனாவுடன் இதுபோன்ற தொடரில் மோதிய இந்தியா, அதில் 2 வெற்றிகள் கண்டது நினைவுகூரத்தக்கது.

இந்திய அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: சவிதா, பிஷு தேவி காரிபம்.

டிஃபெண்டா்கள்: நிக்கி பிரதான், இஷிகா சௌதரி, சுஷிலா சானு புக்ரம்பம், லால்தன்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபஸ்.

மிட்ஃபீல்டா்கள்: சலிமா டெடெ, லால்ரெம்சியாமி, நேஹா, சாக்ஷி ராணா, சுனெலிதா டோப்போ, தீபிகா சோரெங், சோனம்.

ஃபாா்வா்ட்கள்: நவ்னீத் கௌா், பல்ஜீத் கௌா், தீபிகா, அன்னு, இஷிகா, ஹினா பனோ, ருதுஜா ததாசோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.