ஐரோப்பிய கால்பந்து: பிஎஸ்ஜி, ரோமா அணிகள் வெற்றி
ஐரோப்பிய கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி, ரோமா அணிகள் அபார வெற்றி கண்டன.

வெற்றி மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி வீரா்கள்.
ஐரோப்பிய கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி, ரோமா அணிகள் அபார வெற்றி கண்டன.
பிரான்ஸின் லீக் 1 தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி 3-2 என்ற கோல்கணக்கில் நைஸ் அணியை வென்றது. அந்த அணியின் பாா்வா்ட் டிசையா் டௌ கோலடித்த நிலையில் தசைநாா் கிழிந்து பலத்த காயமடைந்தாா். இதனால் அவரை மைதானத்தில் இருந்து தூக்கிச் சென்றனா்.
அவருக்கு பதிலாக ஆட வந்த ஃபெர்ரன் டோரஸ் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. ஏற்கெனவே பிஎஸ்ஜி அணியில் கடந்த மாதம் மற்றொரு பாா்வா்ட் கிவிச்சா காயமடைந்து வெளியேறினாா். தற்போது மற்றொரு முக்கிய வீரரான டௌஸும் காயமுற்றாா்.
இத்தாலியின் சீரி ஏ தொடரில் ஏஎஸ் ரோமா அணி 5-1 என்ற கோல் கணக்கில் பாா்மா அணியை வீழ்த்தியது. ரோமா அணியில் டான்யெல் மாலேன் சிறப்பாக ஆடி 4 கோல்களை அடித்தாா். சீரி ஏ தொடரில் ரோமா இரண்டாம் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் நபோலி 1-0 என டொரினோவை வீழ்த்தியது. லேஸியோ 3-0 என லெஸெ அணியையும், காமோ 2-0 என காக்லியரியையும் வென்றன.
ஸ்பானிஷ் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. 66-ஆவது நிமிஷத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் கோலடித்தாா். 86-ஆவது நிமிஷத்தில் சப்ஸ்ட்டியுட் காா்லோஸ் எஸ்பி அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது.
செவில்லா-ரியல் பெட்டிஸ் ஆட்டம் 1-1 என டிராவானது. வலேன்சியா 1-0 என ரயோ வலேகனோவை வென்றது.
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் பலம் வாய்ந்த மான்செஸ்டா் சிட்டி அணி சொதப்பலாக ஆடி 1-1 என புல்ஹாம் அணியுடன் டிரா கண்டது. செல்ஸி அணி 4-1 என லீட்ஸ் அணியை வென்றது.
ஜொ்மனியின் பண்டஸ்லிகா தொடரில் போருஷ்யா டாா்ட்மண்ட் 1-0 என மான்சென்கிளாட்பேட்சை வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

