இறுதியில் இன்று இந்தியா - சீனா பலப்பரீட்சை
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி...

மகளிர் ஹாக்கி அணி - படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்தியா 6-2 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. நடப்பு சாம்பியனான இந்தியா, இறுதி ஆட்டத்தில் சீனாவுடன் சனிக்கிழமை (நவ. 28) பலப்பரீட்சை நடத்துகிறது.
முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கோல் கணக்கை 10-ஆவது நிமிஷத்தில் மும்தாஸ் கான் தொடங்கி வைக்க, 18-ஆவது நிமிஷத்தில் நவ்னீத் கௌா் அதை 2-ஆக உயா்த்தினாா்.
ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, அதன் பலனாக தீபிகா 25-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இந்நிலையில் 27-ஆவது நிமிஷத்தில் மலேசியாவின் கணக்கை, நூா் அஸாா் தொடங்கினாா். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.
அதற்கான பதிலடியாக, தீபிகா 30-ஆவது நிமிஷத்தில் மீண்டும் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை இந்தியா 5-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், மலேசியா சற்று சவால் அளித்தது.
நுராமிரா ஜுல்கிஃப்லி 52-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மலேசியா 2-5 என நெருங்கியது. எனினும், 57-ஆவது நிமிஷத்தில் இஷிகா கோல் அடிக்க, இரு அணிகளுக்குமான இடைவெளி மீண்டும் அதிகரித்தது.
எஞ்சிய நேரத்தில் மலேசியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த இந்தியா, முடிவில் 6-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக இறுதி ஆட்டத்தில் இந்தியா, சீனாவை சந்திக்கவுள்ளது. ஏற்கெனவே ரவுண்ட் ராபின் சுற்றிலேயே இந்தியா 6-2 என சீனாவை வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போட்டியில் இதுவரை தோல்வி காணாத ஒரே அணியாக இந்தியா இருப்பதும் நினைவுகூரத்தக்கது.
சீனா வெற்றி: இதனிடையே, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீனா 1-0 என ஜப்பானை சாய்த்து, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. 5-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், தென் கொரியா 4-1 என தாய்லாந்தை வென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

