ஹாக்கி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - நியூஸிலாந்து மோதிய ஹாக்கி தொடரின் 3-ஆவது ஆட்டம் 2-2 கோல் கணக்கில் திங்கள்கிழமை டிரா ஆனது.
ஹாக்கி தொடரை வென்ற இந்தியா - X | Hockey India
இந்தியா - நியூஸிலாந்து மோதிய ஹாக்கி தொடரின் 3-ஆவது ஆட்டம் 2-2 கோல் கணக்கில் திங்கள்கிழமை டிரா ஆனது.
மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என வென்றது. முன்னதாக இந்தியா முதல் ஆட்டத்தில் 3-2 என வென்ற நிலையில், 2-ஆவது ஆட்டத்தை 2-2 என டிரா செய்திருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்தின் டைலன் தாமஸ் 9-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதற்கான பதிலடியாக இந்திய கேப்டன் சஞ்ஜய் 16-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்தாா்.
தொடா்ந்து தமிழ்நாடு வீரா் காா்த்தி செல்வம் 18-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, இந்தியா முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், கடைசி வரை போராடிய நியூஸிலாந்து தரப்பில் பெஞ்ஜி குல்ஹேன் 55-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

