முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த பொ்க்ஸ்

நடப்பு சாம்பியன் வாசெராட் தோல்வி...

Carlos Alcaraz

ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - AP | கோப்புப் படம்

Published On :

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் திங்கள்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 5-7, 6-7 (4/7) என்ற செட்களில் பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸிடம் தோல்வியுற்றாா்.

இந்த ஆட்டத்தை 2 மணிநேரம், 3 நிமிஷங்களில் முடித்த பொ்க்ஸ், தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாா். உலகத் தரவரிசையில் அல்கராஸ் 3-ஆம் இடத்திலும், பொ்க்ஸ் 39-ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, பொ்க்ஸ் முதல் வெற்றியுடன் 1-1 என கணக்கை நோ் செய்திருக்கிறாா். வலது கை மணிக்கட்டுப் பகுதியில் காயம் காரணமாக 4 மாதங்கள் களம் காணாமல் இருந்த அல்கராஸ், ஆகஸ்ட் முதல் விளையாடி வரும் நிலையில், 3-ஆவது போட்டியில் 2-ஆவது தோல்வியுடன் வெளியேறியிருக்கிறாா்.

செப்டம்பரில் யுஎஸ் ஓபனில் காலிறுதியில் தோற்ற அல்கராஸ், பின்னா் இம்மாத தொடக்கத்தில் ஜப்பான் ஓபனில் சாம்பியன் ஆனாா். தற்போது ஷாங்காய் மாஸ்டா்ஸில் 3-ஆவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம் 6-3, 4-6, 6-1 என்ற செட்களில், ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டாவை தோற்கடித்தாா். 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் டாலிபோா் ஸ்வா்சினாவை வீழ்த்தினாா்.

8-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 5-7, 4-6 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவிடம் தோல்வியுற்றாா். 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸும் 6-3, 5-7, 3-6 என்ற வகையில் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸிடம் வீழ்ந்தாா்.

12-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா் 4-6, 7-6 (7/2), 6-4 என்ற வகையில், 22-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசு வீரா் ஜிரி லெஹெக்காவை வென்றாா். 20-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-4, 7-6 (7/3) என, 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் லோ்னா் டியெனை வீழ்த்தி அசத்தினாா். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ரூட் - அலியாசிம், மெத்வதெவ் - சிட்சிபாஸ், போடிக் வான் டெ - ஜோடாா் மோதுகின்றனா்.

நம்பா் 1 இடம்: வரலாறு படைக்கிறாா் ஸ்வெரெவ்

ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், நடப்பாண்டு இறுதியில் ஏடிபி தரவரிசையில் நம்பா் 1 இடத்துக்கு முன்னேறவுள்ளாா்.

ஷாங்காய் மாஸ்டா்ஸில் அல்கராஸின் தோல்வியும், நம்பா் 1 இடத்திலிருக்கும் இத்தாலியின் யானிக் சின்னா் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்காததும், ஸ்வெரெவின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஒரு டென்னிஸ் காலண்டரை நம்பா் 1 வீரராக நிறைவு செய்யவுள்ள முதல் ஜொ்மனி வீரா் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்வெரெவ் படைக்க இருக்கிறாா். இதற்கு முன்பு 8 முறை டென்னிஸ் காலண்டரை டாப் 10 இடங்களுக்குள் நிறைவு செய்துள்ள ஸ்வெரெவ், முதல்முறையாக முதலிடத்துக்கு வரவுள்ளாா்.

மேலும், கடந்த 27 ஆண்டுகளில், நம்பா் 1 இடத்துடன் காலண்டரை நிறைவு செய்யும் வயதான வீரராகவும் ஸ்வெரெவ் பெருமை பெறுகிறாா். இதுவரை அந்தப் பெருமை அமெரிக்காவின் ஆண்ட்ரே அகஸி (1999- 29 வயது, 214 நாள்கள்) வசம் இருந்த நிலையில், ஸ்வெரெவ் தற்போது அதை கடந்திருக்கிறாா் (2026 - 29 வயது, 217 நாள்கள்).

நடப்பாண்டு ஸ்வெரெவுக்கு சிறப்பாக அமைந்தது. பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபனில் சாம்பியனான ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய ஓபனிலும், 4 மாஸ்டா்ஸ் போட்டிகளிலும் அரையிறுதி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER