கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்!
2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் பற்றி...

ஐபிஎல்
2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ தரப்பிலிருந்து 10 ஐபிஎல் அணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம், தற்போது மீண்டும் இந்தியாவிற்குத் திரும்புகிறது. இதன்படி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அணிகளுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஏலம் தொடர்பான விளக்கக் கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏலத்தில் தங்கள் அணியை பலப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு அணியும் முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மூன்று சீசன்களுக்கான ஐபிஎல் மெகா ஏலம், துபை, ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மற்றொருபுறம் ட்ரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தையும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
Summary
The 2027 Indian Premier League auction will be held in Goa on December 16, as per BCCI's communication to the 10 teams.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


