ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் இங்கிலாந்தின் 'இளம் புயல்’ சோனி பேக்கர்!
இங்கிலாந்தின் இளம் வேகப் பந்துவீச்சாளர் சோனி பேக்கர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து...

சோனி பேக்கர் - AP
இங்கிலாந்தின் இளம் வேகப் பந்துவீச்சாளர் சோனி பேக்கர் (23 வயது) ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் டார்பேவில் பிறந்த சோனி பேக்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2021, ஜூலை 25ல் அறிமுகமாகியிருந்தார். 16 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
சமீபத்தில் சீனியர் இங்கிலாந்து அணியில் அறிமுகமாகி உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஒரு டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும் 6 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் 4 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
சோனி பேக்கரின் பந்துவீச்சு விதம் பலரையும் கவர்ந்துள்ள நிலையில் அவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவிருக்கிறார். சில ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளன.
லகனௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இவரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் டிச.16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சோனி பேக்கர் 145 கிமீ/ மணி வேகத்தில் பந்துவீசும் திறன் உடையவராகவும் பந்தை லாவகமாக திருப்பும் திறமையும் பெற்றுள்ளார். தி ஹன்ட்ரட் லீக்கில் எம்எஸ்ஜி அணியில் விளையாடிய பேக்கர் 13 விக்கெட்டுகளை எடுத்தார்.
லஎஸ்ஜி அணியின் உரிமையாளர்தான் தி ஹன்ட்ரட் லீக்கில் எம்எஸ்ஜி அணிக்கும் உரிமையாளர் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த மாதம்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சோனி பேக்கருக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் அளித்ததும் நினைவுகூரத்தக்கது.
Two in two ð
— The Hundred (@thehundred) August 16, 2026
Sonny Baker ends Manchester Super Giants' bowling innings in style ð¤#TheHundredFinal pic.twitter.com/sYdRN8lvTM
Players to take five wickets on Finals Day:
— T20 Blast (@VitalityBlast) July 18, 2026
Sonny Baker
End of list. ð pic.twitter.com/PWHY7nHQV9
Summary
England’s ‘young sensation’ Sonny Baker to participate in the IPL auction!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


