இந்தியாவுக்கு 17ஆவது தங்கம்..! ஷீத்தல் தேவிக்கு ஒரே நாளில் இரண்டாவது!
ஆசிய பாரா விளையாட்டில் ஒரே நாளில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி குறித்து...

ஷீத்தல் தேவி - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
ஆசிய பாரா விளையாட்டில் ஒரே நாளில் வில்வித்தையில் இரண்டாவது தங்கம் வென்ற ஷீத்தல் தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இத்துடன் இந்தியாவுக்கு 17ஆவது தங்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஆசிய பாரா விளையாட்டில் வில்வித்தையில் காம்பவுன்ட் தனிநபர் மகளிர் பிரிவில் ஷீத்தல் தேவி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவில் தோமன் குமார் உடன் இணைந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றிருந்தார். இந்த எடிஷனில் இரண்டாவது தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஷீத்தல் தேவி பாராலிம்பிக்ஸில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கங்கள், ஆசிய பாரா போட்டிகளில் 4 தங்கம் உள்பட 6 பதக்கங்கள், உலக பாரா தொடர்களில் 4 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
மொத்தமாக இந்தியாவுக்கு 17 தங்கம், 22 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக 73 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது.
THE QUEEN REIGNS SUPREME!ð¥³
— Doordarshan Sports (@ddsportschannel) October 22, 2026
Sheetal Devi strikes GOLD in the Para Compound Womenâs Individual event at #APG2026, reigning supreme and adding another glorious chapter to her name. #Cheer4Bharat pic.twitter.com/t1QA64t6Th
ஷீத்தல் தேவி இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தவர். அவர் தனது கால்கள், தோள் பட்டைகளை வைத்து வில்வித்தையில் ஒரே நாளில் இரண்டாவது தங்கம் வென்று பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார்.
INDIA IS BLESSED TO HAVE AN INCREDIBLE PARA ARCHER SHEETAL DEVI! ð®ð³ð¥¹
— The Khel India (@TheKhelIndia) October 22, 2026
Paralympics ð¥
World Championships ð¥ð¥ð¥ð¥
Asian Para Games ð¥ð¥ð¥ð¥ð¥ð¥
World Para Series ð¥ð¥ð¥ð¥ð¥ð¥ð¥ð¥
SHE IS AN INSPIRATION TO EVERYONE! ð«¡ pic.twitter.com/3QNaNEPo3H
Summary
Sheetal Devi strikes GOLD in the Para Compound Women’s Individual event at asian para games
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


