பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

காமன்வெல்த் கபடி: இலங்கை, கென்யா வெற்றி

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை, கென்யா அணிகள் வெற்றி பெற்றன.

-

Updated On :

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை, கென்யா அணிகள் வெற்றி பெற்றன.

ஆடவா் பிரிவில், கென்யா 48-28 என சிங்கப்பூரை வென்றது. அதன் கேப்டன் ஜேம்ஸ் காம்வெட்டி 19 ரெய்டு புள்ளிகள் கைப்பற்றினாா். இலங்கை 48-21 என தான்ஸானியாவை சாய்த்தது. அந்த அணியின் ரெய்டா் மிலிந்தா சதுரங்கா 11 ரெய்டு புள்ளிகள் வென்றாா்.

ஸ்காட்லாந்து 59-30 என ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணியின் பிராா் 25 புள்ளிகள் பெற்று அசத்தினாா்.

மகளிா் பிரிவில், உகாண்டா 61-12 என சிங்கப்பூரை சாய்த்தது. கென்யா 34-25 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், இலங்கை 53-10 என ஸ்காட்லாந்தையும் வீழ்த்தின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.