தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

இந்தியாவுக்கு 25ஆவது தங்கம்..! ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்த ஹானி!

ஆசிய பாரா விளையாட்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய வீரர் குறித்து...

Haney creates history with a World Record

தங்கம் வென்ற இந்திய வீரர் ஹானி - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Updated On :

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் ஹானி ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 25 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 37/38 பிரிவில் இந்திய வீரர் ஹானி 60.49 மீட்டருக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 1,116 ராஸா புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

ஈரானின் ஹோர்மூஸ் சேடிகஸ்போஞ்சி 50.68 மீட்டருக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கமும் (10009 புள்ளிகள்) சீனாவின் யு செங்ஜியி 53.66 மீட்டருக்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கமும் (943 புள்ளிகள்) வென்றார்கள்.

எஃப் 37/38 பிரிவுகள் ஒரே போட்டியில் விளையாடுகிறார்கள். அதனால்தான் குறைவான தூரம் வீசிய ஹோர்மூஸ் சேடிகஸ்போஞ்சி வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்றை நாளில் மட்டும் இந்தியாவுக்கு இது நான்காவது தங்கம் என்பதும் மொத்தமாக 25ஆவது தங்கப் பதக்கம் என்பதும் நினைவுகூரத்தக்கது.

Summary

Haney creates history with a World Record performance to clinch Gold in the Men’s Javelin Throw

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER