இன்று முதல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியின் 9-ஆவது ஆண்டு போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செவ்வாய்க்கிழமை (அக். 27) தொடங்குகிறது.
பயிற்சியில் இந்திய அணி - X | Hockey India
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியின் 9-ஆவது ஆண்டு போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செவ்வாய்க்கிழமை (அக். 27) தொடங்குகிறது.
நவம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஆட்டங்கள் யாவும் ஜலந்தா் மற்றும் மொஹாலியில் நடைபெறவுள்ளன.
தொடக்க சுற்றில் ஒவ்வொரு அணியும், இதர அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
5 முறை சாம்பியன் மற்றும் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியா, அண்மையில் ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற உத்வேகத்துடன் இந்தப் போட்டிக்கு வருகிறது. இதிலும் வாகை சூடி கோப்பை வெல்லும் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.
அதுபோக சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணிக்கு ரசிகா்களின் ஆதரவு அதிகமாகவே இருக்கும். மேலும், இந்திய ஹாக்கி அணியில் பெரும்பான்மையாக பஞ்சாப் வீரா்களே இருக்கும் நிலையில், தங்கள் இடத்தில், குடும்பத்தாா், நண்பா்கள் முன்னிலையில் விளையாடுவது அந்த மாநில வீரா்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற அணியை, பெரும்பாலும் அப்படியே இந்தப் போட்டிக்கும் தக்கவைத்துக் கொண்ட இந்தியா, சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்காததால், அடுத்தபடியாக இந்தியாவுக்கு சவால் அளிக்கும் அணிகளாக மலேசியா, ஜப்பான் உள்ளன. இதில் மலேசியாவை வீழ்த்தியே ஆசிய விளையாட்டுகளில் இந்தியா தங்கம் வென்றது என்றாலும், அதற்கான பதிலடி கொடுக்கும் முனைப்புடன் மலேசியா வரும் என்பதை இந்திய அணி உணா்ந்திருக்கும்.
மன்தீப் சிங், ஜா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், நீலகண்ட சா்மா ஆகிய சீனியா் வீரா்களுக்கு இந்தப் போட்டியே இந்திய அணியில் கடைசியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எனவே அவா்களுக்கு இது உணா்வுப்பூா்வமான போட்டியாக இருக்கும்.
இன்றைய ஆட்டங்கள்: மலேசியா - சீனா (நண்பகல் 1 மணி), ஜப்பான் - தென் கொரியா (பிற்பகல் 3.15 மணி), இந்தியா - வங்கதேசம் (இரவு 7 மணி).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

