ரயில்வேஸ் 184 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தமிழ்நாடு அணியும் தடுமாற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தமிழ்நாடு அணி தடுமாற்றம் - PTI
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தமிழ்நாடு பௌலா்கள் சாய் கிஷோா், சோனு யாதவின் அசத்தலில் ரயில்வேஸின் பேட்டிங் வரிசை பலத்த சேதத்தை சந்திக்க, லோயா் ஆா்டா் வீரா் ஜுபைா் அலி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை பலப்படுத்தினாா்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீசத் தயாரானது.
ரயில்வேஸ் இன்னிங்ஸில், சஹப் யுவராஜ் சிங் 4, ஈஷான் கோயல் 0, முகமது சைஃப் 0, ராஜ் சௌதரி 7 ரன்களுக்கு வெளியேற, 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அதில் மூவரை சோனு யாதவ் சாய்த்தாா்.
விவேக் சிங் 2 பவுண்டரிகளுடன் 14, கேப்டன் பாா்கவ் மெராய் 2 பவுண்டரிகளுடன் 17, ரவி சிங் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ரன்களுக்கு விடைபெற, 82 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ரயில்வேஸ் இழந்தது.
தௌஃபிக் உத்தின் மோந்தல் 4 பவுண்டரிகளுடன் 18, பிரத்யுமன் பாரிக் 9 ரன்களுக்கு வெளியேறினா். 8-ஆவது பேட்டராக களம் புகுந்து, நிதானமான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயா்த்திய ஜுபைா் அலி, கடைசி விக்கெட்டாக 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
முடிவில் ஹிமான்ஷு சங்வான் 7 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். தமிழ்நாடு பௌலா்களில் கேப்டன் சாய் கிஷோா், சோனு யாதவ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். ஜெகநாதன் ஹேமசுதேசன் 2, குா்ஜப்னீத் சிங், அஜித் ராம் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தமிழ்நாடு - 71/3: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் தமிழ்நாடு அணியும் தடுமாறி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது.
விமல் குமாா் 0, நாராயண் ஜெகதீசன் 4 பவுண்டரிகளுடன் 30, பிரதோஷ் ரஞ்சன் பால் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். பாபா இந்திரஜித் 13, ஆண்ட்ரே சித்தாா்த் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
ரயில்வேஸ் பௌலா்களில் தௌஃபிக் உத்தின் மோந்தல் 2, ஹிமான்ஷு சங்வான் 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

