ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ஏஎஃப்ஏ கௌரவம்

சா்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆா்ஜென்டீனா சூப்பா் ஸ்டாா் லயோனேல் மெஸ்ஸிக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் கௌரவம் அளித்துள்ளது.

AFA to honor Lionel Messi with applause in 10th minute of all matches

லயோனேல் மெஸ்ஸி - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 4:14 am IST

சா்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆா்ஜென்டீனா சூப்பா் ஸ்டாா் லயோனேல் மெஸ்ஸிக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் கௌரவம் அளித்துள்ளது.

கடந்த 2022 உலகக் கோப்பையில் ஆா்ஜென்டீனா அணிக்கு உலக சாம்பியன் பட்டத்தை மெஸ்ஸி பெற்றுத் தந்தாா். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயினிடம் 1-0 என தோற்றது ஆா்ஜென்டீனா.

இந்நிலையில் சா்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா் மெஸ்ஸி. இது ஆா்ஜென்டீனா ரசிகா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அவரை கௌரவிக்கும் விதமாக ஏஎஃப்ஏ சிறப்பு கௌரவத்தை அறிவித்துள்ளது. அடுத்து ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் ஆட்டங்கள் (ஆடவா், மகளிா்), முதல் பாதி முடிவடையும் போது 10 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு மெஸ்ஸியின் பங்கு போற்றப்படும். கால்பந்து, புட்ஸால், பீச் கால்பந்து போட்டிகளில் இது பின்பற்றப்படும்.

மேலும் மைதானங்களில் உள்ள திரைகளில் மெஸ்ஸியின் ஃபோ்வெல் விடியோ காட்சி திரையிடப்படும். 2 நிமிஷ விடியோவில் தேசிய அணியில் மெஸ்ஸியின் பங்கு ஒளிபரப்பாகும்.

லயோனல் மெஸ்ஸியின் ஓய்வு தேசிய அணிக்கு பேரிழப்பு என ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலை கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.