FOLLOW US

ON GOOGLE DISCOVER

மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!

லயோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்...

News image

தந்தை ஜார்ஜுடன் மெஸ்ஸி.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 6:39 pm IST

ஆர்ஜென்டீனா அணியின் கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக்குறைவால் ரொசாரியோவில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.

உலகளவில் கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமிக்கவர் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி. இவர் சமீபத்தில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில், இவரது தலைமையிலான ஆர்ஜென்டீனா இறுதிப்போட்டி வரை சென்று ஸ்பெயின் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

கிளப் போட்டிகள் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளைக் காணவரும் மெஸ்ஸியின் தந்தையான ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், உலகக் கோப்பைத் தொடருக்கு இடையே அவர் மரணமடைந்ததாகவும் வதந்திகள் பரவின.

இந்த சூழலில், ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜார்ஜின் உடல் நிலை முன்னேறி வருவதாக சில நாள்களுக்கு முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஜார்ஜ் மெஸ்ஸி சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்ததாக ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயினை சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஜார்ஜின் இறப்புக்கான காரணத்தை மெஸ்ஸியின் குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

காலஞ்சென்ற ஜார்ஜுக்கு லயோனல் மெஸ்ஸியைத் தவிர்த்து அவரது மனைவி செலியா, மகன்கள் ரோட்ரிகோ, மதியாஸ், மகள் மரியா சோல் மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர். ஜார்ஜ் மெஸ்ஸியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியடைந்த கால்பந்து ரசிகர்கள், முன்னாள் சக வீரர்கள், கால்பந்து வர்ணனையாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Jorge Messi, father and longtime representative of soccer icon Lionel Messi, has died at 68 in his hometown of Rosario, Argentina, according to multiple outlets in Argentina and Spain. The family has not disclosed an official cause of death, only confirming he had been fighting a long illness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.