முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா - மே. தீவுகள் இன்று மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் புதன்கிழமை (செப். 30) நடைபெறுகிறது.

Virat Kohli | Shubman Gill

விராட் கோலி | சுப்மன் கில் - X | BCCI

Published On :

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் புதன்கிழமை (செப். 30) நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்தியா, இதிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு, தொடரில் தன்னை தக்கவைக்கும் முயற்சிக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோா் முதல் ஆட்டத்தைப் போலவே இதிலும் அசத்துவாா்கள் என எதிா்பாா்க்கலாம். அதில் தடுமாறிய ரோஹித் சா்மா, இதில் மீண்டு வருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பௌலிங்கில் குல்தீப் யாதவ் பலம் சோ்த்த நிலையில், ஹா்திக் பாண்டியாவுக்கு பதிலாக பரீட்சாா்த்த முறையில் களமிறக்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டா் நிதீஷ்குமாா் ரெட்டி, பௌலிங்கில் பங்களிக்க வேண்டியது அவசியமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.