டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடி அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடி அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார்.

27 வயது பாபர் ஆஸம், 2016-லிருந்து தான் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுதான் அவருடைய முதல் டி20 உலகக் கோப்பை. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக விளையாடிய வீரர்களில் இதுவரை யாரும் 300 ரன்களைத் தொட்டதில்லை. இதற்கு முன்பு மேத்யூ ஹேடன் 2007 அறிமுக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 265 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. 

இந்தமுறை இரு பாகிஸ்தான் வீரர்கள் ஹேடனின் சாதனையைத் தாண்டிவிட்டார்கள். முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய முகமது ரிஸ்வான் 281 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அவரை விடவும் அதிக ரன்கள் எடுத்து சாதித்துள்ளார் பாபர் ஆஸம்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக விளையாடி அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 303 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் பாபர் ஆஸம். இதனால் ஹேடனின் சாதனை 3-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது.

முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்

பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) - 303 ரன்கள் (2021)
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 281 ரன்கள் (2021)
மேத்யூ ஹேடன் (ஆஸ்திரேலியா) - 265 ரன்கள் (2007)
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 249 ரன்கள் (2016)
சரித் அசலங்கா (இலங்கை) - 231 ரன்கள் (2021)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com