டி20 உலகக் கோப்பை: தெ.ஆ. அணிக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆஸ்திரேலியா
முதல்முறையாக சர்வதேச டி20 ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய மூவரும் விளையாடுகிறார்கள்.

கேப்டன் ஃபிஞ்ச்

கேப்டன் ஃபிஞ்ச்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸி. அணியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அகர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஸாம்பா, ஹேசில்வுட் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸும் அணியில் இடம்பெற்றுள்ளார். முதல்முறையாக சர்வதேச டி20 ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய மூவரும் விளையாடுகிறார்கள்.
பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் 2 வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சுழற்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...