மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்குத் திரும்பிய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.

News image
வெங்கடேஷ் ஐயர்
Updated On :23 அக்டோபர் 2021, 8:04 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா, கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கே. கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாகத் தேர்வானார்கள். ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர்கள் நாடு திரும்பாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி, இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்கள். 

இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இதன் காரணமாக வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வான கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கே. கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்தியாவுக்குத் திரும்பும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதன்படி நால்வரும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கிய பிறகு வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் வீரர்கள் ஈடுபட மாட்டார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாட முடியும் என தேர்வுக்குழுவினர் கருதினார்கள். அவர்களால் டி20 ஆட்டங்களிலும் விளையாடி பயிற்சி பெற முடியும். மேலும் வெயில் அதிகமாக உள்ளதால் வலைப்பயிற்சிக்கு அதிக அளவிலான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்கி இந்திய அணியினரின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.