ட்விட்டரில் மோதிக்கொண்ட ஹர்பஜன் சிங் - முகமது அமிர்

ட்விட்டரில் மோதிக்கொண்ட ஹர்பஜன் சிங் - முகமது அமிர்

ட்விட்டர் தளத்தில் ஹர்பஜன் சிங்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமிரும் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 
Published on

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்வைத்து ட்விட்டர் தளத்தில் ஹர்பஜன் சிங்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமிரும் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ட்விட்டரில் ஹர்பஜன் சிங்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமிரும் மோதிக்கொண்டார்கள்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற பிறகு முகமது அமிர், ஹர்பஜனை வம்புக்கு இழுத்தார். ஹர்பஜன் தற்போது தனது வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்துவிட்டாரா எனக் கேலியாகப் பேசினார்.

பாகிஸ்தானுக்கு எதிராகக் கடைசி ஓவரில் தான் அடித்த சிக்ஸர் காணொளியை இணைத்து, ட்விட்டரில் ஹர்பஜன் கூறியதாவது: இந்த சிக்ஸர் உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி மீது விழுந்ததா எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்பிறகு ஹர்பஜன் ஓவரில் சாஹித் அப்ரிடி நான்கு சிக்ஸர்களை அடித்த காணொளியைப் பகிர்ந்தார் அமிர்.

இதையடுத்து 2010 லார்ட்ஸ் டெஸ்டில் நோ பால் வீசி மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் அமிர் சிக்கிய விவகாரத்தைக் கையில் எடுத்தார் ஹர்பஜன் சிங். உங்களைப் போன்றவர்களுக்கு, எல்லாமே பணம் தான். சுயமரியாதை கிடையாது. எவ்வளவு பணம் கிடைத்தது என்பதை உங்கள் நாட்டு மக்களுக்குச் சொல்லக்கூடாதா என்று பதிலடி கொடுத்தார்.

இதன்பிறகு பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்ததையும் விதிமுறையை மீறி பந்துவீசியதாக ஹர்பஜன் சிங் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்ததையும் குறிப்பிட்டுக் காண்பித்தார் அமிர். பிறகு மீண்டும் தான் சிக்ஸர் அடித்த காணொளியைப் பகிர்ந்த ஹர்பஜன், ஃபிக்ஸருக்கு இந்த சிக்ஸரைப் பகிர்கிறேன். தொலைந்து போ என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com