ரிச்சி பெரிங்டன், ஜோஷ் டேவி மிரட்டல்: பப்புவா நியூ கினியாவை வென்றது ஸ்காட்லாந்து

பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றை நெருங்கியுள்ளது.
ரிச்சி பெரிங்டன், ஜோஷ் டேவி மிரட்டல்: பப்புவா நியூ கினியாவை வென்றது ஸ்காட்லாந்து


பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றை நெருங்கியுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 5-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் செவ்வாய்க்கிழமை விளையாடின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெரிங்டன் 70 ரன்கள் சேர்த்தார்.

166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பப்புவா நியூ கினியாவுக்கு டாப் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. 35 ரன்களுக்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சேச பாவ் மற்றும் நார்மன் வனுவா மட்டும் பேட்டிங்கில் ஆறுதல் அளித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களைக்கூடத் தாண்டவில்லை.

பப்புவா நியூ கினியா 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் டேவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் ஆட்டத்தில் ஏற்கெனவே வங்கதேசத்தை வீழ்த்தியதால் சூப்பர் 12 சுற்றை ஸ்காட்லாந்து நெருங்கியுள்ளது. இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் 'பி' பிரிவில் ஸ்காட்லாந்து முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com