சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

டி20 உலகக் கோப்பை: 165 ரன்கள் எடுத்த ஸ்காட்லாந்து

ரிச்சி பெரிங்டன் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 12:04 pm

DIN

பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முதல் சுற்று ஆட்டங்களாக அழைக்கப்படுகின்றன. அவற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஓமனில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ரிச்சி பெரிங்டன் 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். மேத்யூ கிராஸ் 45 ரன்கள் எடுத்தார். மோரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் 15 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது ஸ்காட்லாந்து அணி. கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு ஸ்காட்லாந்து அணிக்கு உருவாகும்.  பப்புவா நியூ கினியா முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.