டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெறுவது குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெறுவது குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அஸ்வின். 

கடைசியாக ஜூலை 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சர்வதேச டி20 ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 63 டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை.  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அஸ்வின் தற்போது பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியிருக்கிறார். இங்கிலாந்து அணி 188 ரன்கள் எடுத்தபோதும் அஸ்வின் பந்துவீச்சில் அதிகமாக ரன்கள் குவிக்க முடியவில்லை.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவார் என அறியப்படுகிறது. எனினும் பயிற்சி ஆட்டங்களில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசினால் அவரை அணியில் சேர்க்கவும் இந்திய அணி பரிசீலனை செய்யும் எனத் தெரிகிறது. 4 வருடங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் விளையாடும் தருணத்தை அஸ்வின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com