டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் விளையாடுவாரா?

பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 
லிவிங்ஸ்டன்
லிவிங்ஸ்டன்


பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 

இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்கச் சென்றபோது இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனுக்கு சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஓய்வறைக்குச் சென்ற லிவிங்ஸ்டன் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. லிவிங்ஸ்டனுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என இங்கிலாந்துத் தரப்பு கூறியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன், பந்துவீச்சில் 1 விக்கெட் எடுத்தார். 

லிவிங்ஸ்டன் காயம் பற்றி மொயீன் அலி கூறியதாவது:

முதலில் பயமாகத்தான் இருந்தது. காயம் பற்றி லிவிங்ஸ்டனிடம் கேட்டபோது பரவாயில்லை என்று பதிலளித்தார். எனவே அவர் முழுவதுமாகக் குணமாகி விளையாடுவார் என்றே நினைக்கிறேன் என்றார்.

லிவிங்ஸ்டன் இதுவரை 8 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அக்டோபர் 23 அன்று நடைபெறும் முதல் டி20 உலகக்கோப்பைப் போட்டி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com