ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும்?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது.
ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்கும்?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிராக முதல் பயிற்சி ஆட்டத்தை விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தை இன்று விளையாடவுள்ளது. இந்திய நேரம் மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார். 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் பாண்டியா அந்த ஆட்டத்தில் பந்துவீசவில்லை.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தை ஞாயிறு அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. அந்த ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவதால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். அல்லது ரிஷப் பந்தை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே இருவரும் இந்திய அணியில் இடம்பெற முடியும் என்கிற நிலைமை நீடிக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஷர்துல் தாக்குர் இடம்பெறுவாரா என்கிற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. அவர் அணியில் சேர்க்கப்பட்டால் புவனேஸ்வர் குமார், ஷமி ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பெறக் கூடிய வீரர்கள் குறித்த விவரங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com